Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் பன்றி இறைச்சி கடையில் கோஷ்டி மோதல்… 3 பேருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி, திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல் இவரது மகன் வினோத் ( 36) இவர் கடந்த 21 ந்தேதி அந்தப் பகுதியில் உள்ள பன்றி இறைச்சி கடையில் கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கொண்டயம்பேட்டை பகுதியை சேர்ந்த கவியரசன் (வயது 21) சொக்கலிங்க (வயது 18) மற்றும் அவரது ஆதரவாளர்கள் நந்தகுமார் (வயது 30) ஸ்ரீதர் ஆகிய நான்கு பேர் அருகில் அமர்ந்து கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது
வினோத்தின் மாமா ரமேஷ் என்பவரிடம் கவியரசன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இறைச்சி கடை முன்பு சண்டை போட்டுக் கொண்டனர். பிறகு ரமேஷ் மிடம் இருந்து ரூபாய் 1500 பணத்தை பறித்துக் கொண்டு கவியரசன் தலைமையிலான கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிறகு நடந்த சம்பவத்தை ரமேஷ்சின் சகோதரர் சுரேஷ் கவியரசன் தாயிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார்இதனால் ஆத்திரமடைந்த கவியரசன் தனது நண்பர்கள் சொக்கலிங்கம் , நந்தகுமார் ஸ்ரீதர் ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று வினோத் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு ஈடுபட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வினோத் மற்றும் அவரது தந்தை குமரவேல் மற்றும் உறவினர் சுரேஷ் ஆகியோர் மீது அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் இந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வினோத் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து
கவியரசன், சொக்கலிங்கம் ஆகிய இரண்டு பேரை கைது செய்து உள்ளனர்.இவர்கள் இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர். மேலும் நந்தகுமார், ஸ்ரீதர் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!