தூத்துக்குடியில் யூடியூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அலெக்ஸ் (22), பிரகாஷ் (23), குரு (21) ஆகிய நண்பர்கள், அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெடிகுண்டை தயாரித்து, அதை வெடிக்கச் செய்து வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
