Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணக்கெடுப்பு பணியில் இருந்த ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி!

கணக்கெடுப்பு பணியில் இருந்த ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி!


குஜிலியம்பாறை பூங்கா நகரை சேர்ந்தவர் அவிநாசிமணி. இவரது மனைவி சண்முகப்பிரியா
( 38). இவர் கரிக் காலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்று வருகிறார். இவர் கடந்த 23-ந்தேதி கோமுட்டிப்பட்டி பகுதியில் மக்கள் கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டார். பின்னர் இரவு 7 மணிக்கு தனது மொபட் டில் அங்கிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குஜிலியம்பாறை- கரிக்காலி சாலை ரெயில்வே பாலம்
அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென சண்முகப்பிரியா அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது
அந்த வழியாக பொதுமக்கள் வந்ததால் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சண்முகப்பிரியா குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை
தேடி வருகின்றனர்.

error: Content is protected !!