பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் மோசமான நோய்களால் அவதிப் பட்டு வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. நாய்களை விஷம் கொடுத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது. தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரித்த மருந்தை நரம்பு வழியாக செலுத்தியே கொலை செய்ய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
