Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி சுப்பிரமணியர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலுக்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள், மூலவர் முருகன் கையில் இருந்த அரை கிலோ

கிலோ எடையுள்ள வெள்ளி வேல் மற்றும் உண்டியலில் இருந்த 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், கோவில் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த 11 பித்தளைக் குடங்கள், 11 பித்தளைச் செம்புகள், 11 பித்தளைக் குத்துவிளக்குகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பூஜைப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!