ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள துர்காபுரம் அருகே சென்ற போது, கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
அந்த பஸ்ஸில் மொத்தம் 43 பேர் பயணம் செய்த நிலையில், 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
