சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழக் கிணற்றில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனார் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள யானைகவுனி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
