Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பேரவையில் விவாதமா நடக்குது.. கச்சேரி தான் நடக்குது”- வெளுத்து வாங்கிய CPM சண்முகம்

பரந்தூரில் கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், “சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதம் இல்லை… லாவணிக் கச்சேரி நடக்கிறது. பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பேச சபாநாயகர் போதிய நேரம் ஒதுக்குவதில்லை. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆரோக்கியமான விவாதம் நடைபெறாமல் கச்சேரி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளை பேசாமல் பேரவை நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது. சட்டசபையில் குழாயடி சண்டை வேண்டாம். நேரலை ஒளிபரப்பு மூலம் எம்.எல்.ஏக்களின் செயல்பாட்டை தொகுதி மக்கள் பார்க்கின்றனர். தங்கள் தொகுதி எம்.எல்.ஏ பேசுகிறாரா, தூங்குகிறாரா என்பதை அறிய முடிகிறது.

பரந்தூரில் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக சட்டத்துக்கு விரோதமாக தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளக்கூடாது. விமான நிலையம் வேண்டாம் என்பது அரசின் நிலை அல்ல. இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், பரந்தூர் அதற்குப் பொருத்தமில்லாத இடம். அதனால்தான் திமுக ஆட்சியில் மச்சேந்திரன் குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரடியாகச் சந்தித்து, அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சொன்னோம். அவர்கள் என்ன சொல்லி வந்தாலும், அதை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினோம். ஆட்சி காலம் முழுவதும் அதை அவர்கள் செய்யவில்லை. மச்சேந்திரன் குழு அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்க என்ன நோக்கம் உள்ளது? இப்போதுகூட அந்த அறிக்கை என்ன சொல்கிறது என்பதை அறிய, தமிழக வெற்றிக் கழக அரசு மச்சேந்திரன் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!