நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளத்தால், அங்கு சுற்றுலா சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் தமிழகத்தை சேர்ந்த பல சுற்றுலா பயணிகளும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போன இந்தியர்களை கண்டறிய அந்நாட்டு அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த வௌ்ளத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
