உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கொடியேற்ற விழா மற்றும் தேர்ப் பவனியில்

பங்கேற்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். திருவிழாவை

முன்னிட்டு பேராலயத்தின் கோபுரங்கள் மற்றும் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால்

அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பேராலயத்தை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
