தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலகளக்குடி கிராமத்தில் எழுந்தருளிள்ள ஸ்ரீ சந்தன காளியம்மன் ஆலய 36 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைப்பெற்று யாகசாலையில் 4 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட

கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து மேள தாள வாத்தியங்கள், முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் ஸ்ரீ சந்தன காளியம்மன் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர்

ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சந்தன காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து

கொண்டு சாமி தரிசித்து வழிப்பட்டனர். விழாவின் ஏற்பாடுகளை மேலகளக்குடி கிராமவாசிகள், கிராம நாட்டாமைகள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
