Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை பெட் ஷாப்பில் ரூ.20,000 மதிப்புள்ள நாய், பூனை திருட்டு…

ரூ.20,000 மதிப்புள்ள நாய், பூனை திருட்டு” ; கோவை பெட் ஷாப்பில் நடந்த நூதன கொள்ளையின் அதிர்ச்சி சி.சி.டி.வி!

“புகார் தரல… என் செல்லப் பிராணிகள் கிடைச்சா போதும்” – கெஞ்சும் கடை உரிமையாளர் : வீடியோ வைரல்!

​ கோவை, தடாகம் சாலையில் உள்ள வளர்ப்புப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் (Pet Shop) மர்ம நபர்கள் இருவர் புகுந்து, ரூபாய் 20,000 மதிப்பிலான நாய் மற்றும் பூனையை நைஸாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை, தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் பெட் ஷாப் ஒன்றிற்கு பிற்பகல் வேளையில் இரண்டு வாலிபர்கள் வந்து உள்ளனர். கடையில் உரிமையாளரின் கவனம் குறைந்த நேரத்தைப்

பயன்படுத்திய அந்த நபர்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த ₹15,000 மதிப்புள்ள நாய் மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள பூனை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளனர்.

வாலிபர்கள் இருவரும் வளர்ப்புப் பிராணிகளைத் தூக்கிக் கொண்டு நைஸாக நழுவும் காட்சிகள்

கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் துல்லியமாகப் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் திருட்டு சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் எந்தவிதப் புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்து உள்ள கடை உரிமையாளர், “காவல்துறை வழக்கு, விசாரணை எதுவும் எனக்கு வேண்டாம். திருடிச் செல்லப்பட்ட எனது செல்ல நாய் மற்றும் பூனை பத்திரமாகக் கிடைத்தால் மட்டுமே போதும்” என உருக்கமான பதிவொன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

​உரிமையாளரின் இந்த உருக்கமான வேண்டுகோளைத் தொடர்ந்து, அந்த சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

error: Content is protected !!