அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் பாரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசுடன் தொடர்புடைய ஊடகம் ஒன்று அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரன் பயிலும் பல்கலைக்கழகம் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் அடங்கிய அவ்வீடியோவில், அவரை கொல்பவர்களுக்கு ரூ.1 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.95 கோடி) பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்கனவே மோதல் நிலவும் சூழலில், இந்த அச்சுறுத்தல் வெளியாகி உள்ளதால் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
