அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச்சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அமெரிக்க வீரர் பேபியானோ கருணாவிடம் முதல் கிளாசிக்கல் ஆட்டத்தில் தோல்வியடைந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில், கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 48-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். இதனால், கருணா 6-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இறுதிப்போட்டி கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் என பல சுற்றுகளைக் கொண்டுள்ளது.
