திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி, கடந்த திமுக ஆட்சி காலத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் மணி மீண்டும் ஒலிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பழமையான மணியை வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
