சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவோர் மீதான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. திமுகவினர் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக காவல்துறை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
