நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்தது. இதனிடையே, நேபாளத்தில் 315 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், திபெத் பகுதியில் சுமார் 400 இந்தியர்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேபாள வெள்ளம்: “315 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை’..
