“தமிழக அரசு அறிவித்த மாதம் ரூ.2,500 உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றவில்லை” என சட்டப்பேரவையில் இன்று (ஆக.28) திமுக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “100 நாள் தானே ஆகுது. இப்படி தான் ‘சிலிண்டர் கொடுக்க முடியாது’ என்று சொன்னீங்க. ஆனால், கொடுத்துவிட்டோம். அந்த மாதிரி எல்லா திட்டங்களையும் செய்து முடித்துவிடுவோம்” என பதிலளித்தார். இதற்கு பதிலளித்த மாஜி அமைச்சர் நேரு, “நாங்கள் நினைவுபடுத்துகிறோம்; செய்தால் நல்லது தான்” என்றார்.
