தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி உத்தரவின்பேரில் நடந்த முகாமில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் சீனிவாசன், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் சரவணன், கண் மருத்துவர் அறிவழகன், மனநல மருத்துவர் மங்கையர்கரசி ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனர்.
முகாமில் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்காக 24 நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட பொருளாளர் சுதாகர், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் நியமன கவுன்சிலர் ஆனந்தகிருஷ்ணன், பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
