நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்ததை அந்நாட்டு ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பேரிடரில் இந்தியர்களின் உயிர் பறிபோனதற்கு இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நேபாளத்தின் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். நேபாளத்தில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
