Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரதட்சணை கொடுமை- பெண் ஆசிரியை தற்கொலை

வரதட்சணை கொடுமை- பெண் ஆசிரியை தற்கொலை-விசாரணை

வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூர், பிள்ளையார் கோயில் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் புவனேஸ்வரி (27). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2024ம் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சாங்கரணியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது பெண்ணிற்கு 50 சவரனும், மாப்பிள்ளைக்கு 20 சவரன் நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த குழந்தையின் முதலாண்டு பிறந்தநாளுக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் 1.1/4 சவரன் செயின் மட்டுமே குழைந்தைக்கு போட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி தனது அப்பா வீட்டருகே உள்ள கோயிலில் திருவிழா நடப்பதால் புவனேஸ்வரி தந்தை வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். அவரிடம் தொலைபேசியில் பேசிய ஜானகிராமன், நீ வீட்டிற்கு வர வேண்டாம், உன் தாய் வீட்டிலேயே இரு என கூறினாராம். இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று புவனேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளின் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டாதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என விசாரிக்க கிண்டி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!