Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சை – கருப்பையா கருத்து நீக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவற்றுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி மற்றும் சேலை உற்பத்தி குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா, ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு அதிமுக, அமமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். எம்.எல்.ஏவின் பேச்சை கண்டித்து அதிமுக வரும் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

error: Content is protected !!