Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூண்டி மாதா பேராலயத்தில் திருவிழா களைகட்டியது

பூண்டி மாதா பேராலயத்தில் திருவிழா களைகட்டியது

மிகவும் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலய மரியாள் பிறப்பு பெருவிழா வான வேடிக்கையுடன் கொடி ஏற்று விழா கோலாகலமாக நடைபெற்றது

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா 7ம் தேதி இரவு நடைபெறுகிறது.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்

தஞ்சை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் மிகவும் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம்

அமைந்துள்ளது

இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட துண்டின் ஒரு பகுதி பக்தர்கள் வழிப்பாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளது

இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் மரியாள் பிறப்பு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

முன்னதாக மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய சப்பரத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதா சொருபத்தையும் மாதா உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட கொடியையும் பேன்ட் வாத்யங்கள் இசையுடன் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து கொடிமரம் வந்தனர்.

குடந்தை மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் கொடிக்கு புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.

வான வேடிக்கை முழக்கத்துடன் நடந்த கொடியேற்ற விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி முழக்கமிட்டு மாதாவை வழிப்பட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா 7ம் தேதி நடைபெறுகிறது

error: Content is protected !!