தாம்பரம் அருகே இல்லாத பால் கேட்டு தர மறுத்ததால் 60,வயது முதியவர் மீது கொடூர தாக்குதல், சிசிடிவி காட்சி வெளியானது
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் ஆவின் பால் பூத் வைத்து நடத்தி வருபவர் சங்கர நாராயணன் (60) இவரது பால் கடைக்கு அடையாளம் தெரியாத நபர் வந்து,

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை கேட்டுள்ளார. அதற்கு சங்கர நாராயணன் நீங்கள் கேட்கும் பால் தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் எனவே என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் முதியவரை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டு சென்று மேலும் இரண்டு நபர்களை அழைத்துவந்து பால் வைக்கும் டிரே மூலமாக வயதான முதியவர் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, தாக்குதலுக்கு பின் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பாதிக்கப்பட்ட முதியவர் இது குறித்து சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
ஆனால்,புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யாமல் போலீசார் அலைக்கழித்து வருவதாக 60,வயது முதியவர் வேதனை தெரிவிக்கிறார்.
இல்லாத பாலை கேட்டு மறுத்ததற்காக முதியவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
