தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரியப்பன் (64). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வள்ளியூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.2ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
