Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம்-டூவீலரில் சென்ற நபர் மீது அரசு பஸ் மோதி விபத்து…

பாபநாசம்-டூவீலரில் சென்ற நபர் மீது அரசு பஸ் மோதி விபத்து...

பாபநாசத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் நண்பரின் மகள் திருமணத்திற்கு சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ..

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஆசாரி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, 108-சிவாலயம் மெயின் ரோட்டில் வசிப்பவர் ராஜகோபால் மகன் சரவணன் (40). இவர் ஆசாரி வேலை பார்த்து வந்தார்..

சரவணன் தனது நண்பரின் மகள் திருமணத்திற்காக பாபநாசத்தில் அமைந்துள்ள எம்ஏ திருமண மண்டபத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்..

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருப்பாலத்துறை பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த (எஸ்ஐடிசி) அரசு பேருந்து இரண்டு சக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த சரவணன் மீது மோதியது..

இதில் நிலைகுலைந்த சரவணன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்..

விபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சரவணனின் பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!