அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய உயிரினங்களை காப்பாற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் விரைவில் பிரமாண்ட ஊர்வன உயிரின பாதுகாப்பு விலங்கு காட்சி சாலை
தஞ்சாவூரை சேர்ந்த கணேஷ் முத்தையா என்பவர் Madras Crocodile Bank Trust அமைப்பின் அறங்காவலராக உள்ளார், இவர் Temple of REPTILES நிறுவனர் இயக்குனராகவும் உள்ளார்,

இந்நிலையில் Save The REPTILES என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார், கடந்த
28ஆம் தேதி தொடங்கிய இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் 117 நாட்கள் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று பயணம் சென்று பள்ளி, கல்லூரிகள், காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார், இது குறித்து கணேஷ் முத்தையா என்பவர் கூறுகையில், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தனித்தனி பங்கு உண்டு, மனிதர்களுக்கும், ஊர்வன உயிரினங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு, இதை நாம் உணர்வதில்லை, இதை புரிந்து கொள்வதற்கு தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கமாகும், மேலும்
Madras Crocodile Bank Trust ன் 50 வது வருடம் இது ஆகும், அதையொட்டியும் இந்த பயணம் பெரிதாக பார்க்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் Temple Of REPTILES Specilize ZOO விரைவில் வர உள்ளது, தமிழ்நாடு வனத்துறை பரிந்துரையுடன், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அனுமதி அளித்துள்ளது, இந்தத் திட்டத்தை சென்னை ஐஐடி நிறுவனம் செயல்படுத்த உள்ளது, சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இது அமைய உள்ளது, இதில் 40 வகையான ஊர்வன உயிரினங்கள் வர உள்ளன, 20 வகையான பாம்புகள், 10 வகையான முதலைகள், பல்லி இன வகைகள், நிலத்திலும் தண்ணீரிலும் இருக்கக்கூடிய ஆமைகள் ஆகியவை வர உள்ளன, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய நிறைய உயிரினங்களை காப்பாற்றுவதற்கு zoo தயாராகி வருகிறது என்று கூறினார், இந்நிலையில் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்த கணேஷ் முத்தையாவை அவரது நண்பர்கள் உறவினர்கள் வரவேற்றனர், பின்னர் அதைத் தொடர்ந்து அவர் பல்வேறு ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றார்
