Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி கே கே நகர் போலீசரத்துக்கு உட்பட்ட கே சாத்தனூர் ரெயில்வே கேட் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த மயில்சாமி (வயது 43) என்பவரை கேகே நகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை கைது செய்து அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று காந்தி மார்க்கெட் போலீஸ்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த தர்மராஜ் (வயது 26) என்பவரை காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளார். இதேபோன்று உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோணக்கரை மெயின் ரோட்டில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாராயணன் (27) என்பவரை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட மயில்சாமி, தர்மராஜ், நாராயணன் ஆகியோரை போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

error: Content is protected !!