Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் புகுந்து மிரட்டி 40 சவரன் நகை, 40 லட்சம் பணம் அபேஸ்!

வீட்டில் புகுந்து மிரட்டி 40 சவரன் நகை, 40 லட்சம் பணம் அபேஸ்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்பு விவசாயத்திற்கும், வெல்ல உற்பத்திக் கூடங்களுக்கும் பெயர் பெற்றவையாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் பிற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் விற்பனைக்கு அனுப்பப்படுவதால், இங்குள்ள வியாபாரிகளிடம் கணிசமான அளவில் பணப்புழக்கம் இருக்கும். இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் ஒன்று, திட்டமிட்டு இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்த வெல்ல வியாபாரியான வைரவன், வழக்கம்போல் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வைரவனை அச்சுறுத்தி, ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய அந்த நபர்கள், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் மற்றும் நகைகள் பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளனர்.

வைரவனைப் பயமுறுத்தி முடக்கிய கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 40 சவரன் தங்க நகைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஜேடர்பாளையம் காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் விரல்ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்கச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!