ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சோதனை நடைபெறும் நாளன்றே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி ஆவணங்களை வரும் 15-ஆம் தேதி முதல் இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
