நிலம் மற்றும் ராணுவச் சலுகைகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சனைக்கு மத்தியில், விஷம் அருந்திய கார்கில் போர் வீரர் என்.கே.சிவானந்த ரெட்டி, பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய அவர், கார்கில் போரின்போது காயமடைந்து 2000-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதிலிருந்து, தனக்குரிய சலுகைகளையும் நிலத்தையும் பெறுவதற்காக 24 ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், அரசு அலுவலகங்களை அணுகியபோதும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
