முந்தைய அரசு தொடுத்த வழக்குகளை திரும்ப பெறுவதாக தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செப்.2) சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அரசு பதிவு செய்யும் வழக்குகளையே திரும்ப பெறுகிறீர்கள் என்றால், இனி நீங்கள் யார் மீதும் வழக்கு போட மாட்டீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
