தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாலை நடந்த சாலை விபத்து தொடர்பாக, பிரபல கலை இயக்குநர் ஆனந்த் சாயின் மகன் சந்தீப்பை ராய்துர்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இன்னோவா காரை ஓட்டி வந்த டிரைவரும் காயமடைந்தார். அதிகாலை 4:15 மணியளவில் விபத்து நடந்தது. மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தீப் சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய நிலையில், அவரது மஹிந்திரா XUV மின்சார வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
