Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கோவிலில் பக்தர்கள் போன் எடுத்துச் செல்ல தடை….

கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் கோவிலில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை நுழைவாயிலில் பிரத்யேக மொபைல் பாதுகாப்பு அறை மொபைல் ஃபோன்களை கொடுத்து செல்லும் பக்தர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய திருக்கோவில்களில், செப்டம்பர் 1ம் தேதி முதல் ஸ்மார்ட்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில்களின் புனிதத்தன்மையை பாதுகாப்பதுடன், பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி

அமைதியாக தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட சில கோவில்களில் மட்டுமே செல்போன் தடை நடைமுறையில் இருந்தது.

தற்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட 52 முக்கிய கோவில்களுக்கும் இந்தத் தடை

விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோவில்களுக்குள் பக்தர்கள் சிலர் சுவாமி சிலைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதும், அவற்றை சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பதிவிடுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் வகையிலும், கோவில்களின் ஆகம விதிகள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் மட்டும் ஸ்மார்ட்போன் கொண்டு செல்ல தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக, கோவில் நுழைவாயிலில் பிரத்யேக மொபைல் பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு செல்போனை பாதுகாப்பாக ஒப்படைக்க 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் ஒப்படைத்ததற்கான டிஜிட்டல் ரசீதும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

error: Content is protected !!