கேரளம் மாநிலம் மலப்புரம் வந்தூரில், மதுபோதையில் மனைவியை கணவர் குத்திக் கொலை செய்தார். சாப்பாட்டுக்கு ஏன் குழம்பு செய்யவில்லை? என மனைவி ஃபசீலாவிடம் (38) கேட்டு கணவர் ரஷீத், சண்டையிட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஃபசீலாவை கத்தியால் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஃபசீலாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். காவல்துறையினர் ரஷீதைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
