Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை கள்ளச் சந்தையில் மது விற்பனை-பரபரப்பு

கோவை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…..

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தை ஒட்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ள இந்த

பேருந்து நிறுத்தத்தில் 24 மணி நேரமும் பயணிகள் நின்று பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை மத்திய ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என அனைத்து தலைமை நிலையங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் அதனை சுற்றியுள்ள சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அனுமதி

மறுக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் பேருந்து நிறுத்தத்தில் சக பயணி போல் அமர்ந்திருக்கும் ஒரு நபர் தான் வைத்திருக்கும் கைப்பையில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் அவல நிலை உருவாகியுள்ளது.இதனை கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…..

error: Content is protected !!