Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரை வந்தடைந்த பாசன நீர் – விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் கரூர் வந்தடைந்தது மாயனூர் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், டெல்டா பாசனத்திற்காக முதற்கட்டமாக 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து வைத்த நிலையில், தொடர்ந்து பாசனத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட பாசன நீர் தற்போது கரூர் மாவட்டப் பகுதிகளை

வந்தடைந்துள்ளது.

இந்த நீர் திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2,737 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி வெறும் 1,258 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது

அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் வரும் நீரை அப்படியே கதவணை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் மாயனூர் காவிரி கதவணை பகுதியில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!