Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புரோட்டா இல்லாத பிரியாணி கடையா?.. ஓனருக்கு அரிவாள் வெட்டு

புரோட்டா இல்லாத பிரியாணி கடையா என கேட்டு முதலாளிக்கு அருவாள் வெட்டு சிசிடிவி காட்சி வைரல்

கும்பகோணம்

2 – 9-26

கும்பகோணம் அருகே
அம்மாசத்திரத்தில்உமர் முக்தர்முகமது யாசின் இருவரும் சேர்ந்து நடத்திவரும் பிரியாணி கடைக்கு நேற்று சாப்பிட வந்தவர் புரோட்டா கேட்டுள்ளார் புரோட்டா இல்லை பிரியாணி தான் உள்ளது என இவர்கள் கூறவே புரோட்டா இல்லையா என கேட்டு கடை முதலாளியை அருவாளால் வெட்டிய காட்சி இணையத்தில் வைரல்

கும்பகோணம் அருகே அம்மா சத்திரத்தில் சோழபுரம் ராமானுஜர் நகர் பகுதியைச் சேர்ந்த உமர் முக்தார், திருபுவனம் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது யாசின் இவர்கள் இருவரும் இணைந்து பிரியாணி கடை நடத்தி வருகின்றனர்.

மாலை அம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார் அங்கு அவர் சாப்பிட புரோட்டா கேட்டுள்ளார்

கடையில் உள்ளவர்கள் புரோட்டா தயார் செய்ய நேரமாகும் தற்போது பிரியாணி தான் உள்ளது என கூறியுள்ளனர் இதற்கு புரோட்டா இல்லாமல் ஏன் பிரியாணி கடை நடத்துகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சதீசுக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரும் சேர்ந்து
கொண்டு கடையின் உரிமையாளர்கள்உமர் முக்தார், முகமது யாசின் இருவரையும் அறிவாளால் தாக்கியுள்ளனர் இந்த தாக்குதலில் இருவரும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது

இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது பற்றி திருவிடைமருதூர் போலீசார் அம்மாசத்திரம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த சதிஷ் தோப்புத் தெரு பகுதியைச் சேர்ந்த பழனி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில்வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!