Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ரேசன் கடையில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை துவக்கம்

தஞ்சை நியாய விலை கடைகளில் வெங்காயம் விற்பனை தொடக்கம் கிலோ 35 ரூபாய்க்கு ஒரு கார்டு ஒரு கிலோ விதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடும் வறட்சி மற்றும் உற்பத்தி பாதிப்பு காரணமாக பல்லாரி வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் விதமாக தமிழக அரசு நியாய

விலை கடை மற்றும் பண்ணை பசுமை அங்காடிகளில் குறைந்த விலையில் வெங்காயம் இன்று முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தஞ்சை நகர பகுதியில் உள்ள கூட்டுறவு நியாய விலை அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ விதம் பொருட்கள் வாங்க வருபவர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!