தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ள சம்பவங்கள் நடந்து வருவதாக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் அவதிபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, எனது தோட்டத்தில் உள்ள மின் மோட்டருக்கு பயன்படுத்தப்படும் மின் ஒயர்களை சிலர் திருடிவிட்டுச் சென்றுள்ளனர்” என்றார். மேலும், “எனக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.
எனது தோட்டத்து போர்வெல்லில் மின் ஒயர் திருட்டு…இபிஎஸ் பேச்சு
