Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம் – ரூ.3.78 கோடி டெண்டர்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அலுவலகமானது நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு, அதற்காக சுமார் ரூ. 5 கோடி செலவில் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளமானது பிளாக் 1, பிளாக் 2, பிளாக் 3 என்று மூன்றாக பிரிக்கப்பட்டு இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூன்று டெண்டர்களுக்கும் ஒரே நிறுவனமானது குறைந்த தொகையை கோரியுள்ள நிலையில், அந்த நிறுவனத்திற்கு விரைவில் டெண்டர் வழங்கப்படவுள்ளது. டெண்டர் விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று டெண்டருக்கும் சேர்த்து ரூ.5.54 கோடிக்கு பொதுப்பணித்துறை எஸ்டிமேட் தயார் செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனமானது ரூ.3.78 கோடிக்கு அந்த டெண்டரைச் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, அந்த நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. பிளாக் ஒன்றுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான பணிக்கு ரூ.1.66 கோடியும், பிளாக் இரண்டுக்கு ரூ.2.01 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ரூ.1.37 கோடியும், பிளாக் மூன்றுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான பணிக்கு ரூ.74.94 லட்சம் தொகையும் அந்த நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

பொதுப்பணித்துறை நிர்ணயித்த தொகையை விட 32% சதவீதம் குறைவான தொகையை ‘ராசி பில்டர்ஸ்’ நிறுவனம் கோரியுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அந்த நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணி ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் முதலமைச்சரின் அலுவலக பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் முதலமைச்சர் அந்த புதிய அலுவலகத்திற்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!