Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர்-ராதை வேடமடைந்து ஊர்வலம்

கரூரில் சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர்-ராதை வேடமடைந்து ஊர்வலம்

கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் ராதை வேடமடைந்து ஊர்வலம்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கரூரில் உள்ள பல்வேறு கிருஷ்ணர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர் சிலை அமைக்கப்பட்டு, பசு மாட்டிற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்கள் தூவி தீபாராதனை

காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்றனர். பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, ஈஸ்வரன் கோவில் பகுதியில்

இருந்து ஊர்வலம் தொடங்கி மாநகராட்சி சாலை, ஜவஹர் பஜார், பழைய பேருந்து நிலையம் வழியாக தனியார் திருமண மண்டபத்தை சென்றடைந்தது.

மேலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறுவர், சிறுமியர் மயில் தோகை அணிந்து, கையில்

புல்லாங்குழல் ஏந்தி கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பாரம்பரிய ஊர்வலம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

error: Content is protected !!