மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் 6E 225, இன்று (செப்.4) காலை ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சிறிய விபத்தில் சிக்கியது. விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி செய்தபோது, அங்கிருந்த கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். ஆய்வுக்காக தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
