Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

தண்ணீர் திறக்க வலியுறுத்தி 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்

நெல்லை பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட கடைமடை குளங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செப்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர். 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலையில் படுத்தும், கருகிய வாழை மரங்களை சாலையில் வீசியும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

error: Content is protected !!