தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க தமிழக போக்குவரத்து ஆணையரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திடீர் சோதனை நடத்தி விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம் மற்றும் தேவையான இடங்களில் பர்மிட் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
