மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை கேப்டன் சாமரி அத்தபத்து அபாரமாக பந்துவீசி 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக்கும் அடங்கும். இதன்மூலம் மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்தோனேசியா 18.3 ஓவர்களில் 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 75 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
