கரூரில் 29-வது மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் – 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் 29-வது மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த தடகளப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம்

தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டு

தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
