உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நேற்று முன்தினம் (செப்.4) ஒரே நாளில் 68 ஆயிரத்து 374 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களில் 35 ஆயிரத்து 241 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளனர். பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடன் மூலம் அன்றைய ஒருநாள் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4 கோடியே 7 லட்சம் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 7 லட்சம்
