ரஷ்யாவில் வடக்கு காகசஸ் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 6 பேர் மாயமாகியுள்ளனர். கபர்தினோ-பால்காரியாவில் உள்ள பெசெங்கி பள்ளத்தாக்கில், 33 மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவின் மீது பனிச்சரிவு ஏற்பட்டது. இவர்களில் 10 பேர் தாங்களாகவே இறங்கி வந்தனர்; 11 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
