Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார்- விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த தன்னை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புகொண்டதாகவும், தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிப்பதற்காக ரூ.5 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் பணத்தைத் திருப்பித் தருவதாக விஜயபாஸ்கர் உறுதியளித்ததாகவும், அதன்படி சுமார் ரூ.4.50 கோடியைத் திரட்டி, ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவர் மூலம் விஜயபாஸ்கரிடம் வழங்கியதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் செலவுகளுக்காக வழங்கிய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, விஜயபாஸ்கர் தொடர்ந்து காலதாமதம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஜயபாஸ்கர் ஆளும் கட்சியில் இணைந்துள்ள நிலையில், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது தன்னை மிரட்டியதாகவும் தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் மேற்கண்ட புகார் மீது காவல்துறை சார்பில் ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. புகார்தாரரான தனவிமலை செப்டம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கூறி காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!